search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் குடிமகன்கள், சமூகவிரோதிகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்
    X

    மரம், செடிகள் அடர்ந்து காணப்படும் திண்டுக்கல் ரெயில் நிலையம்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் குடிமகன்கள், சமூகவிரோதிகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்

    • திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது.திண்டுக்கல் வழியாக நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • ரெயில்வே நிர்வாகம் சாலை ஓரத்தில் உள்ள செடிகளை அகற்றி சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குள்ளனம்பட்டி:

    தென் மாவட்டங்களில் அமைந்துள்ள பிரதான ரெயில் நிலையங்களுள் ஒன்றாக திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது.திண்டுக்கல் வழியாக நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.தினமும் சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா்.

    இந்த நிலையில் ரெயில்வே நுழைவு வாயிலுக்கு உள்ளே செல்லும் சாலை ஓரத்தில் அடர்ந்த மரங்களும், செடிகளும் உள்ளது.இந்த செடிகளுக்கு மத்தியில் மது பிரியர்கள் மது அருந்துகின்றனர்.போதை தலைக்கேறியதும் மது பாட்டிலை சுக்குநூறாக உடைத்து வீசுகின்றனர்.மேலும் மரங்கள் மற்றும் செடிகள் நிறைந்து அடர்ந்த பகுதியாக உள்ளதால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ரெயில்வே நுழைவு வாயிலுக்கு செல்லும் வழியில் மாலை நேரங்களில் மது பிரியர்கள் உட்கார்ந்து செடிகளுக்கு நடுவில் மது அருந்துகின்றனர்.மேலும் ஒரு சிலர் இரவு நேரங்களில் பெண்களை அழைத்து உல்லாசத்தில் ஈடுபடுகின்றனர்.

    செடிகள் அடர்ந்து காணப்படுவதால் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.மேலும் ஒரு சில சமூக விரோதிகள் நூதன முறையில் யாசகம் செய்வதாக கூறி அமர்ந்து கொண்டு, இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்களிடம் வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர்.

    போலீசாரும் மது போதையில் இருப்பவர்களை நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறுகின்றனர்.

    இதனால் இந்த பகுதிகள் முழுவதும் மது அருந்தும் கூடாரமாகவே திகழ்கிறது.ஆகவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.ரெயில்வே நிர்வாகம் சாலை ஓரத்தில் உள்ள செடிகளை அகற்றி சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×