search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல்ரகத்தை பார்வையிட்ட திண்டுக்கல் விவசாயிகள்
    X

    பாரம்பரிய நெல்ரகத்தை பார்வையிட்ட திண்டுக்கல் விவசாயிகள்

    • 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடப்பட்டுள்ளது.
    • சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளத்தில் மாநில அரசு விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த விதைப்பண்ணையில் நடப்பு நிதியாண்டில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த விதைப்பண்ணைக்கு திண்டுக்கல் விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டார முன்னோடி விவசாயிகள் 50 பேர் வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாவட்டத்தில் கண்டுணர் சுற்றுலா மூலம் களப் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளனர்.

    பாப்பான்குளத்தில் உள்ள பாரம்பரிய நெல் வயலை பார்வையிட்ட விவசாயிகளுக்கு விதைப்பண்ணையின் மேலாளர் கோகுல் விதைப்பண்ணை அமைக்கும் நடைமுறைகள் மற்றும் விதை சான்றளிப்பு செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார்.

    மேலும் பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள ரகங்களான கோ 51, வி.ஜி.டி. 1 மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள கோ 55 ஆகிய ரகங்களின் சிறப்பியல்புகளையும் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களையும் அவர் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசன்னா மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் ஜெயசுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×