என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

    மகா முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், வீதியுலாவும் நடைபெற்றது.
    • பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தியும் கோவிலை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கீழவீதியில் புகழ்பெற்ற மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

    நேற்று மாலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆனைக்கோவில் குளத்திலிருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

    கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் இந்நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்துகொன்டனர்.

    தீமிதி விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×