search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மாற்றம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மாற்றம்

    • இதுவரை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்று வந்தது.
    • வரும் 27ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    27-9-2022 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொண்டு, தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×