என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை- தலைமைக்கழகம் அறிவிப்பு
- திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் தீரன் சின்னமலை சிலை அமைந்துள்ளது.
- சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்தநாளான 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிஅளவில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய திருஉருவ சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






