என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி: மத்திய அரசுக்கு சொந்தமான  அலுவலக சுவரை உடைத்து யானைகள் அட்டகாசம்
    X

    தருமபுரி: மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலக சுவரை உடைத்து யானைகள் அட்டகாசம்

    • சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது.
    • சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கிராமங்களில் சுற்றி திரியும் இரண்டு யானைகளை பிடிக்க தருமபுரி மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு கோணங்கி அள்ளி, சின்ன பங்கு நத்தம், கவுண்டன் கொட்டாய், கூலி கொட்டாய், ஆகிய கிராமங்கள் வழியாக சோம் பட்டி கிராமத்தில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இங்குள்ள பவர் கிரேட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் இங்கிருந்து பகிர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×