என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரி பேருந்து நிலையத்தில்  இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம்
  X

  பஸ்நிலையத்தில் தடையை மீறி நிறுத்திய இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்த போது எடுத்தபடம்.

  தருமபுரி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி திணறி வருகிறது.
  • இருசக்கர வாகனங்களை நிறுத்திய நபர்களை மடக்கி அபராதம் விதித்தனர்.

  தருமபுரி,

  தருமபுரியில் வெளியூர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளுக்கு தனித்தனியே பஸ் நிலையங்கள் உள்ளது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி திணறி வருகிறது.

  மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க , குளிர்பானங்கள், சூப், டீ, காபி அருந்த வருவோர் தங்களது இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்துவதால் பேருந்துகளை உரிய இடத்தில் நிறுத்த முடியாமல் பஸ் நிலையத்தின் நடுவிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் சூழல் உள்ளது.

  இந்நிலையில் நேற்று தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்திய நபர்களை மடக்கி அபராதம் விதித்தனர்.

  இதனால் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உள்ளே நுழையாமல் அப்படியே திரும்பி சென்றனர். மேலும் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனங்களில் நுழைய முயன்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

  இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பயணி களும்,போக்குவரத்து ஊழியர்களும் இதை தொடர வேண்டுமென்றும் இதேபோல் பஸ் நிலையத்திற்குள் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை முன்பாக திருநங்கைகள் உள்ளிட ்டோரால் ஏற்படும் அசவுகரியத்தை தவிர்க்கவும் நடவடிக்கை வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×