search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி மாரியம்மன் கோவிலில்  பக்தர்கள் பால்குட பவனி
    X

    விழாவில் பால்குட ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட பவனி

    • ஆறுமுகநேரியில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா மற்றும் சித்திரை கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது.
    • 3-வது நாளான நேற்று காலையில் சோமநாத சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா மற்றும் சித்திரை கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாளன்று காலையில் கணபதி ஹோமம், யாக பூஜையை தொடர்ந்து அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, சிறப்பு ஆராதனையும் நடந்தன. 2- வது நாள் மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடி கடல் தீர்த்தம் எடுத்து வருதலும், கும்ப வீதி உலாவும் நடந்தன. 3-வது நாளான நேற்று காலையில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து அம்மன் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் மஞ்சள் நீராடி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து கும்ப வீதி உலா நடைபெற்றது. பின்னர் அம்மன் சப்பர பவனி நடந்தது.பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்கார பூஜையும், பொங்கல் வழிபாடும் நடந்தது. இன்று அதிகாலையில் மஞ்சள் நீராட்டு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான பாலமுருகன், கண்ணன், மாடசாமி, முத்து ராமலிங்கம், ராஜ்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×