search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
    X

    தொட்டிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

    • திருவிழா கடந்த 23-ந் தேதி பொரிசாட்டுதலுடன் தொடங்கியது.
    • 180 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தொட்டிபாளையத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி பொரிசாட்டுதலுடன் தொடங்கியது. 25-ந் தேதி கரும்பு வெட்டுதல், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 29-ந் தேதி பிள்ளையார் பொங்கல், குண்டம் திறத்தல், குண்டத்தில் பசுமாடு விடும் நிகழ்ச்சியும் பின்னர் புண்ணியார்ச்சனை நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து இரவு குண்டத்துக்கு தீ மூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடந்தன. நேற்று அதிகாலை சக்தி கரகம் மற்றும் வீரபத்திரன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெ ற்றன.

    தொடர்ந்து காலை 7 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து 180 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குண்டம் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திரு ந்தனர்.

    Next Story
    ×