என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வையிட்டார்.
கொடைக்கானலில் கோடைசீசன் தொடங்க உள்ள நிலையில் ரூ.90 கோடி மதிப்பில் அபிவிருத்தி பணிகள்
- விரிவாக்கப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பார்வை யிட்டார்.
- கொடைக்கானலில் ரூ.90 கோடி செலவில் நடை பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் சீசன் காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானல் பகுதியில் பஸ் நிலையம் சீரமைத்தல், ஏரி அபிவிருத்தி பணிகள். புதிய காய்கறி அங்காடி அமைக்கும் பணி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறைகள், ஆடு, மாடு வதைக்கூடம், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நடைபெற்று வரும் விரிவாக்கப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வை யிட்டார்.
அவருடன் நகராட்சி களின் மண்டல இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் மனோகரன், கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றத்தலைவர் செல்லத்துரை,துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், பொறியாளர் முத்துக்குமார் உட்பட நகராட்சித்துறை அதிகாரி கள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது,
கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரி பகுதி யில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக சுமார் ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் சீசன் கால ங்களுக்குள் இவை நடத்தி முடிக்கப்படும் என எதிர்பா ர்க்கப்படுகிறது. அதேபோல மீதமுள்ள 17 கி.மீ தொலை சாலைகள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு ள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரில் உள்ள கே.ஆர். ஆர் கலையரங்கம் பகுதியில் சுமார் ரூ. 35 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது. இதில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெறும். அத்துடன் நகரின் மையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடத்திலும் ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக இடம் பார்வையிடப்பட்டது. கொடைக்கானல் நகரில் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ரூ.2½ கோடி செலவில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிச் சாலையை சுற்றியுள்ள சாலை நெடுஞ்சாலை த்துறைக்கு சொந்தமானது.
அதனை முழுமையாக அமைக்கும் பணி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள பஸ் நிலையம் சுமார் ரூ.1½ கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக தனியார் வசம் டெண்டர் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.சென்னையில் உள்ளது போல தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும்.
நகரில் உள்ள 1918 மின்விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டு எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. மேலும் 600 இடங்களில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் ரூ.90 கோடி செலவில் நடை பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் சீசன் காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான பிரகாசபுரம் பகுதியில் ஏற்கனவே குப்பைகளை அகற்றுவது குறித்து இடம் பார்வை யிடப்பட்டு அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






