என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு பகுதிகளில் ரூ.24 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
    X

    பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    கயத்தாறு பகுதிகளில் ரூ.24 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

    • ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு, ஏப்.4-

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவைசெயலாளர் செல்வகுமார், கயத்தாறு ஒன்றிய மாணவரணி செய லாளர் நவநீதகண்ணன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி,நகர துணைச் செயலாளர் தங்க பாண்டியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அகிலாண்டபுரம் பஞ்சா யத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வேதக்கோவில் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதி யிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் சத்திரப்பட்டி கிளை செயலாளர் ஞான தாஸ், அகிலாண்ட புரம் கிளை செயலாளர் லெனின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×