search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் அருகே  வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொள்ளிடம் அருகே வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு

    • வளர்ச்சி திட்ட பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கு வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஊராட்சியில் 600 குடும்பங்க ளுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டு வரும் பணி,கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி, அங்குள்ள சாவடிக்குளம் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கூறுகை யில், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பிடிஓ ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள்தாரா, பலராமன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வனிதாமுரு கானந்தம் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×