என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • தனசீலன் (வயது 32). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு சென்று வந்தார்.
    • திருமணம் ஆகாத இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தும் பெண் கிடைக்கவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லியம்பாளை யம்புதூரைச் சேர்ந்தவர் செங்கோடு. இவரது மகன் தனசீலன் (வயது 32). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு சென்று வந்தார். திருமணம் ஆகாத இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தும் பெண் கிடைக்கவில்லை. மேலும் சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனை கட்டமுடியாமல் கவலையில் இருந்து வந்துள்ளார்.

    திருமணம் ஆகாததாலும், கடனை கட்ட முடியாததாலும் விரக்தியில் இருந்த தனசீலன், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தனசீலன் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை உடனடியாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×