search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏமாற்றும் மழை 118 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்
    X

    கோப்பு படம்.

    ஏமாற்றும் மழை 118 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்

    • அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 47.01 அடியாக சரிந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்று விட்டது.

    எனவே மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×