search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் கிராமப்புற இணைப்பு சாலைகள் சேதம்; சீரமைக்கக்கோரி அறவழி போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரத்தில் கிராமப்புற இணைப்பு சாலைகள் சேதம்; சீரமைக்கக்கோரி அறவழி போராட்டம்

    • திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • 6 கிராமத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் இணைந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவியநகர் வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    அறவழி போராட்டம்

    இந்த சாலைகளை திப்பணம்பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி, பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர தேவைகளுக்கும், மாணவர்கள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனை கண்டித்து 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அறப்போராட்டத்திற்கு சமூக சேவகர் காசிமணி தலைமை தாங்கினார்.

    பங்கேற்றவர்கள்

    மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார் பாண்டியன், துரைசாமி, உத்திர குணபாண்டியன், திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா என்ற அருள் பாண்டி, கல்லூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் மேரி மாதவன், சீனிவாசகம், அயோத்தி ராமர், பூவனூர் ஞானபிரகாசம், ஜோசப், வார்டு உறுப்பினர் சுப்புராஜ், தங்கப்பழம், சண்முக செல்வன், முருகன், அண்ணாதுரை, சண்முகம், பொன்னுதுரை, ஜெய குட்டி, அமல்ராஜ், ஜெயபால், வழக்கறிஞர் உமாபதி, வைகுண்டராஜ், காமராஜ், குத்தாலிங்கம், கவிதா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×