search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம்
    X

    காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம்

    • காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
    • வனப்பகுதி எல்லையில் சோலார் மின்வேலிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் நுழைவது தொடர் கதையாகி வருகிறது.

    காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வந்து கரும்பு மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    தற்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றனர். அதன்படி பஞ்சப்பள்ளி அருகே கங்காபாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் ஞானவேல், வெங்கடாசலம் ஆகியோரது விளை நிலங்களில் புகுந்து சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதனால் பாதிப்புக்குள்ளான விவசா யிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பயிர் சேதத்தை ஆய்வு செய்தனர்.

    காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனப்பகுதி எல்லையில் சோலார் மின்வேலிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×