search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் மே 1-ந்தேதி முதல் தினசரி முட்டை விலை நிர்ணயம்
    X

    நாமக்கல் மண்டலத்தில் மே 1-ந்தேதி முதல் தினசரி முட்டை விலை நிர்ணயம்

    • நாமக்கலில் 8 கோடிக்கு மேலான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இதன் மூலம் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கலில் 8 கோடிக்கு மேலான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. ஆனால் போதுமான விலை கிடைக்காததால் முட்டை உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் நோ மைனஸ் நெக் ரேட் வேண்டும் என்பதே பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருந்தது.

    அதேபோல் முட்டை விலை நிர்ணயம் தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக இருந்தபோதிலும் நோ மைனஸ் நெக்ரேட் என்று வைக்கும் பொழுது அதனை சிறப்பாக மற்றும் சரிவர நடைமுறைப்படுத்த தினசரி விலை இருந்தால் தான் முடியும்.

    இதனால் தினசரி விலையும் நாமக்கல்லில் அமூல்படுத்தப்பட உள்ளது. இதே போல வரும் காலங்களில் என்.இ.சி.சி மட்டுமே விலை அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருப்பதால் மற்ற அமைப்புகள் விலை அறிவிப்பு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    மேலும் லயன் மார்ஜின் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலை என்பது மே 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்படும். என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலையை அமல்படுத்த 50 லட்சம் கோழிகளுக்கு ஒரு குழு என்ற வகையில் நாமக்கல் மண்டலத்தில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்களின் அறிவுரையின் படி வரும் காலங்களில் முட்டை விலை மற்றும் கோழி விலை நிர்ணயம் செய்வது மட்டுமல்லாமல் என்.இ.சி.சி விலை, அதாவது நோ மைனஸ் நெக்ரேட் மற்றும் தினசரி விலை கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்படும்.

    பண்ணையாளர்கள் அனைவரும் நோ மைனஸ் நெக் ரேட் அமுல்படுத்தப்படும் பொழுது அதற்கான ஒத்துழைப்பை நல்கினால் மட்டுமே நோ மைனஸ் நெக்ரேட் என்பதை நடைமுறைப்படுத்த முடியும். எனவே என்.இ.சி.சி அமைப்பு பண்ணையாளர்களின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளை ஆதரித்து அனைவரும் இணைந்து பலனடைவோம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    Next Story
    ×