என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சராங்கு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 30). அ.தி.மு.க.தொண்டர். இவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் கண்ணீர் வடித்தபடி இருந்தார்.

    இந்தநிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தார். திடீரென்று அவர் உடைந்த பீங்கான் துண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

    விஜயகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் கடலூரில் கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது.
    கடலூர்:

    தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த மாதம் 29-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது.

    ‘நடா’ புயல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது.

    இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் நேற்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்தன.

    இன்று காலையிலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா, ராசாப்பேட்டை, அக்கரக்கோரி, நல்லவாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மற்றும் நெல்லிக்குப்பத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இன்று காலையிலும் லேசாக மழை பெய்தது. மேகம் மப்பும் மந்தாரமுமாக காட்சி தருகிறது. தொடர்ந்து குளிந்த காற்று வீசுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுகின்றன.

    இதனால் மரக்காணம் எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம் உள்பட 19 மீனவர் கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

    மரக்காணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை அதிக அளவு பனி கொட்டுகிறது.

    இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    புதுவை மாநிலம் காரைக்காலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மேகம் மப்பும் மந்தாரமாக காணப்படுகிறது. ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

    விருத்தாசலத்தில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் பலியானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கலைவாணி (வயது 28). இவருக்கும் விருத்தாசலம் குட்டைக்காரத் தெருவை சேர்ந்த பாபுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாபு கூடுதல் வரதட்சணைகேட்டு கலைவாணியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கலைவாணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் கலைவாணியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதிர்ச்சியடைந்த தர்மலிங்கம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கலைவாணி இறந்தது தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து தர்மலிங்கம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் கலைவாணியின் சாவில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    புகார் மனுவை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் கலைவாணிக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். கலைவாணிக்கு 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
    விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீரென வாந்தி - மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எடையூர் கிராமம். இந்த கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக இல்லை. எனவே சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை புகார் செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்தநிலையில் எடையூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 40), ராஜமாணிக்கம் (45), சங்கீதா (28), அஞ்சலை (50), பத்மாவதி (35) உள்ளிட்ட 40-பேர்களுக்கு இன்று காலை திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

    உடனடியாக அவர்களை விருத்தாசலம், வேப்பூர், பெண்ணாடம் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தகவல் அறிந்த சுகாதாரதுறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் எடையூர் பகுதியில் முகாமிட்டு மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்ததால் கிராம மக்களுக்கு வாந்திபேதி ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, சுகாதாரமற்ற குடிநீர் பிரச்சினையால்தான் வாந்தி, பேதி ஏற்பட்டது என்றனர்.
    கடலூரில் இன்று காலை மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைபிடித்தபடி நீண்ட வரிசையில் வங்கிகள் மற்றும் ஏ.டிஎம். மையங்கள் முன்பு நீண்டநேரம் காத்து நின்று பணம் எடுத்துச் சென்றனர்.
    கடலூர்:

    கருப்பு பணம், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ந் தேதி அறிவித்தது. போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வராததால் கடந்த 1 மாதமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 192 வங்கிகளும், 300-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் பெரும்பாலானவை இன்று செயல்படவில்லை. குறைவான எண்ணிக்கையிலேயே செயல்பட்டன.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்று வங்கிகள் செயல்படவில்லை. ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பப்படாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இன்று காலை பணம் எடுப்பதற்காக வங்கிகள் திறக்கும் முன்னரே பொதுமக்கள் கடலூரில் உள்ள வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்றதை காணமுடிந்தது. இதேபோல் ஏ.டி.எம். மையங்கள் முன்பும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

    காலை 10.30 மணியளவில் கடலூரில் இன்று மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் குடைபிடித்தபடி நீண்ட வரிசையில் வங்கிகள் மற்றும் ஏ.டிஎம். மையங்கள் முன்பு நீண்டநேரம் காத்து நின்று பணம் எடுத்துச் சென்றனர்.

    திறந்திருந்த சில ஏ.டி.எம்.களிலும் விரைவில் பணம் தீர்ந்துவிட்டதால் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.
    கடலூரில் பாம்பு கடித்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    கடலூர்:

    கடலூர் அன்னவள்ளி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சாதவன் (வயது 4). கடந்த 1-ந்தேதி சாதவன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். அவனது பெற்றோர் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது ஜன்னல் வழியாக வி‌ஷ பாம்பு வீட்டிற்குள் புகுந்தது. அது தூங்கி கொண்டிருந்த சாதவனை கடித்தது. வாயில் நுரைதள்ளி, அழுது கொண்டிருந்த சாதவனை மீட்டு அவனது பெற்றோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சாதவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சாதவன் பரிதாபமாக நேற்றிரவு இறந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவான ‘நடா’ புயல் கடலூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் ‘நடா’ புயல் கடந்த 2-ந் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    எனவே கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுகின்றன.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    * * * கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    ஜெயலலிதா மரணமடைந்தது அடுத்து அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
    சிதம்பரம்:

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார். நேற்று அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் கோபுரத்தில் மாலையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முதலாவதாக தெற்கு சன்னதி கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் நடராஜர் சன்னதியிலும் மோட்ச தீபத்தை தீட்சிதர்கள் ஏற்றினர்.
    ஜெயலலிதா காலமானதையொட்டி நெல்லிக்குப்பத்தில் அரசு பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    நெல்லிக்குப்பம்:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி தகவல் அறிந்ததும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் சாலைமறியல் நடந்தது.

    இந்த நிலையில் பண்ருட் டியில் இருந்து கடலூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் நெல்லிக்குப்பம் அம்பேத்கார் நகர் அருகே வந்தது.

    அப்போது மர்ம நபர்கள் பஸ்சை வழிமறித்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு கீழே இறங்கி அங்குமிங்குமாக ஓடினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதேபோல் நெல்லிக் குப்பம் ஆலை ரோட்டில் உள்ள வாரச்சந்தைக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த காய்கறி கடை களை சூறையாடியது. அதோடு நிறுத்தாமல் அந்த கும்பல் கடைகளில் இருந்த காய்கறியையும் அள்ளிச்சென்றது.

    ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் மட்டு மல்லாது ஏராளமான பொது மக்கள் அதிர்ச்சியடைந்து கண்கலங்கினர். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலை மறியல் நடந்தது.

    பெண்ணாடம்:

    ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் மட்டு மல்லாது ஏராளமான பொது மக்கள் அதிர்ச்சியடைந்து கண்கலங்கினர். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலை மறியல் நடந்தது.

    பெண்ணாடம் அருகே உள்ள கொடிக்கலம் பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் நின்றது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் கண் ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினர்.

    இந்த சம்பவத்தில் அதிர் ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கல்வீச்சில் சேதமடைந்த பஸ்சை டெப் போவுக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணாடத்தில் இன்று அனைத்து கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டிருந்தன.

    விருத் தாசலம் பகுதிகளில் நேற்று இரவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலத்திற்கு வந்திருந்த கிராமக்கள் தங்களது ஊருக்கு திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தனர்.

    இதுகுறித்து அங்கிருந்த போக்குவரத்து ஊழியர் களிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து பயணிககள் திட்டக்குடி செல்வதற்கு ஒரு பஸ் அனுமதிக்கப்பட்டது.

    பஸ்சை மருங்கூரை சேர்ந்த டிரைவர் தங்கமணி ஓட்டிச்சென்றார். பஸ் ஆவினங்குடி அருகே சென்றபோது அங்கு வந்த மர்மகும்பல் பஸ்மீது கல்வீசி தாக்கியது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினர்.

    இதுகுறித்து பஸ்சின் டிரைவர் தங்மணி ஆவினங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் பயணிகளை ஏற்றிச்சென்றனர். திட்டக்குடியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு விருத்தாசலத்திற்கு பஸ் திரும்பியது.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் 5 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
    பண்ருட்டி:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பண்ருட்டி அருகேயுள்ள அண்ணாகிராமம் ஒன்றியம் சன்னியாசிப்பேட்டை காந்தி நகர் காலனியைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை கிளைச் செயலாளர் நீலகண்டன் பதட்டத்துடன் காணப்பட்டார். கோவிலுக்குச் சென்று முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டினார்.

    வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டி.நெய்வாசல் கிளை அ.தி.மு.க. செயலாளராக இருந்தார்.

    அதே தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு. நெய்வாசல் கிளை அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

    ஜெயலலிதா உடல் நிலைப்பாதிப்பு பற்றி அறிந்த சாமுண்டியும், தங்கராசும் மனவேதனை அடைந்தனர். இந்த நிலையில் தங்கராசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். தகவல் அறிந்த சாமுண்டி அங்கு விரைந்து சென்றார். தங்கராசுவின் வீட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

    பின்னர் தனது வீட்டுக்கு சென்று டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் நெஞ்சுவலியால் இறந்தார்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு நத்தம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியில் இறந்தார். அவரது பெயர் பெரியசாமி. நத்தம் குட்டுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ஆவார்.

    கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகரை சேர்ந்தவர் மாரிச்சாமி. மனைவி பழனியம்மாள் என்ற பண்ணம்மாள் (வயது 62). கூலித்தொழிலாளி. அ.தி.மு.க உறுப்பினர்.

    ஜெயலலிதா உடல்நிலை அறிந்து மனம் உடைந்த பண்ணம்மாள் டி.வி. பார்த்தவாறே மயங்கி விழுந்தார். அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.
    ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகி அதிர்ச்சியில் பலியான சம்பவம் பண்ருட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

    ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் பண்ருட்டி அருகேயுள்ள அண்ணாகிராமம் ஒன்றியம் சன்னியாசிப்பேட்டை காந்தி நகர் காலனியைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை கிளைச் செயலாளர் நீலகண்டனுக்கு(வயது 40) தெரியவந்தது.

    எனவே அவர் பதட்டத்துடன் காணப்பட்டார். கோவிலுக்குச் சென்று முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டினார். அதன்பின்னர் யாருடனும் பேசாமல் இருந்தார்.

    தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் நீலகண்டனை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    நீலகண்டன் உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகண்டனுக்கு ‌ஷகீலா என்ற மனைவியும், 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.



    ×