என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம்- விருத்தாசலத்தில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
    X

    பெண்ணாடம்- விருத்தாசலத்தில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

    ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் மட்டு மல்லாது ஏராளமான பொது மக்கள் அதிர்ச்சியடைந்து கண்கலங்கினர். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலை மறியல் நடந்தது.

    பெண்ணாடம்:

    ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் மட்டு மல்லாது ஏராளமான பொது மக்கள் அதிர்ச்சியடைந்து கண்கலங்கினர். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலை மறியல் நடந்தது.

    பெண்ணாடம் அருகே உள்ள கொடிக்கலம் பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் நின்றது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் கண் ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினர்.

    இந்த சம்பவத்தில் அதிர் ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கல்வீச்சில் சேதமடைந்த பஸ்சை டெப் போவுக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணாடத்தில் இன்று அனைத்து கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டிருந்தன.

    விருத் தாசலம் பகுதிகளில் நேற்று இரவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலத்திற்கு வந்திருந்த கிராமக்கள் தங்களது ஊருக்கு திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தனர்.

    இதுகுறித்து அங்கிருந்த போக்குவரத்து ஊழியர் களிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து பயணிககள் திட்டக்குடி செல்வதற்கு ஒரு பஸ் அனுமதிக்கப்பட்டது.

    பஸ்சை மருங்கூரை சேர்ந்த டிரைவர் தங்கமணி ஓட்டிச்சென்றார். பஸ் ஆவினங்குடி அருகே சென்றபோது அங்கு வந்த மர்மகும்பல் பஸ்மீது கல்வீசி தாக்கியது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினர்.

    இதுகுறித்து பஸ்சின் டிரைவர் தங்மணி ஆவினங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் பயணிகளை ஏற்றிச்சென்றனர். திட்டக்குடியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு விருத்தாசலத்திற்கு பஸ் திரும்பியது.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×