என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வு அட்டவணை வெளியீடு
    X

    சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வு அட்டவணை வெளியீடு

    • சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
    • நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது.

    சேலம்:

    சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்

    விரிவுரையாளர் (LS), துணைப் பேராசிரியர் உள்ளிட்ட தகுதி பெற கணினி அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இதையடுத்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது. 16-ந்தேதி பூமி, வளிமண்டலம், பெருங்கடல்

    மற்றும் கிரக அறிவியல்

    இயற்பியல் அறிவியல் கணித அறிவியல்

    17-ந்தேதி உயிர் அறிவியல், வாழ்க்கை அறிவியல்

    18-ந்தேதி ரசாயன அறிவியல் நடக்கிறது.

    பரீட்சை சம்பந்தமான அட்மிட் கார்டுகள்

    10 -ம் தேதியில் இருந்து என்.டி.ஏ. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×