search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிப்பு
    X

    கனமழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிப்பு

    • பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. மழை தொடங்கியவுடன் மின்சாரம் தடைபட்டு பின் நீண்ட நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். நேற்று பெய்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி ன்றனர்.

    கடந்த ஆண்டு மழையால் குறுவை அறுவடையின் போது விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். குறுவைக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாததால் பேரிழப்பு ஏற்பட்டது. மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம் மாநில அரசின் பங்கு தொகையை உயர்த்தியது காப்பீடு செய்ய இயலாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது.ஒரு ஆண்டுக்கு மேலாக முடிவேதும் எடுக்காமல் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, இனியும் காலம் தாழ்த்தாது டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்வது குறித்து இறுதி முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் 9,006 கன அடி, வெண்ணாற்றில் 9001 கன அடி, கல்லணை கால்வாயில் 2804 கனஅடி, கொள்ளிடத்தில் 4494 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×