search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓசூர் சப்பளம்மா கோவிலில் மாட்டு திருவிழா
    X

    மாட்டு திருவிழாவையொட்டி விற்பனைக்காக ெகாண்டு வரப்பட்டுள்ள மாடுகளை படத்தில் காணலாம்.

    ஓசூர் சப்பளம்மா கோவிலில் மாட்டு திருவிழா

    • ஆண்டு தோறும் கோவில் திருவிழா மற்றும் மாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • 5 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே திம்மசந்திரம் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ சப்ளம்மாதேவி கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் கோவில் திருவிழா மற்றும் மாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று தொடங்கியது.

    முன்னதாக, சப்ளம்மா கோயில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திர மூர்த்தி தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும், கோ பூஜை செய்யப்பட்டது.

    இதில், துணைத் தலைவர் தியாகராஜ், நிர்வாகிகள் ராஜா ரெட்டி, கிருஷ்ணப்பா, கெம்பண்ணா, மகேஷ், பாலகிருஷ்ணப்பா, கிருஷ்ணப்பா, சீனப்பா, புட்டப்பா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ராதா கஜேந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர், கஜேந்திரமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், விழாவையொட்டி, மாட்டுத் திருவிழாவிற்கு, இந்தாண்டு சுமார் 1,000 ஜோடி மாடுகள் வரவுள்ளன.

    இதன் மூலம், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விழாவிற்கு வரும் சிறப்பு மாடுகளுக்கு வருகிற 29-ம் தேதி நடைபெறும் விழாவில், முதல் பரிசாக, 10,001- , இரண்டாம் பரிசு ரூ.9,001- ,3- ஆம் பரிசு, ரூ 8,001- , 4-ஆம் பரிசு ரூ. 7,001- , 5 ஆம் பரிசு ரூ. 6,001-, 6-ம் பரிசு ரூ. 5,001- , 7-வது பரிசு ரூ.4,001- , 8-வது பரிசு ரூ.3,001- மற்றும் , 9-வது பரிசாக ரூ 2,001- வழங்கப்படும்.

    மேலும், நல்ல நாட்டு பசு மாடுகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து விவசாயிகள் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு, மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    Next Story
    ×