search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தம்மம்பட்டி பேரூராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

    தம்மம்பட்டி பேரூராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

    • தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • இந்த நிலையில் இதுவரை 3 முறை மட்டுமே பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் இதுவரை 3 முறை மட்டுமே பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக மன்ற கூட்டம் நடத்தாமல் நாள் கடத்தி வந்தனர்.

    மேலும் தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் பேரூராட்சி நிர்வாகம் உள்ளதாக ஆத்திரம் அடைந்த கவுன்சிலர்கள், கடந்த 13-ந் தேதி பேரூராட்சி அலுவலகம் முன்பு மன்ற கூட்டம் நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் 15-ந் தேதி கூட்டம் நடக்காததால், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து நேற்று 11 மணிக்கு பேரூராட்சி மன்றத்தில் மன்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவி கவிதா தலைமை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், தங்கள் வார்டு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளுக்கு தீர்மானத்தை கொண்டு வரவில்லை எனவும், பேரூராட்சியில் செய்யப்படாத வேலைகளுக்கு போலியாக பில் போடப்பட்டு கவுன்சிலரிடம் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு கையெழுப்பும் பெற திட்டமிட்டு இருந்ததாக கூறி கேள்வி எழுப்பினர்.

    மேலும் பேரூராட்சி செலவினங்களுக்கு பதில் கூறாமல் பேரூராட்சி தலைவி கவிதா கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு தலைவி கவிதா மற்றும் அவருடைய கணவர் ராஜா ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×