search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல்  உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்

    எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது வழக்கு

    • தேனி மாவட்ட பேரூராட்சிகளில் கடந்த 2019-2020-ல் எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டதில் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தேனி லஞ்சஒழிப்புத்துறையினர் காண்ட்ராக்டர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்ட பேரூராட்சிகளில் கடந்த 2019-2020-ல் எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டது. இந்த பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. முன்னாள் பேரூராட்சி–களின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, 10 முன்னாள் செயல்அலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் என 13 பேர் மீது தேனி லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உதவி இயக்குனர் பணிபுரிந்த 2019-2020-ம் நிதியாண்டில் அவரின் ஒப்புதலுடன் பேரூராட்சிகளில் செயல்அலுவலர்களாக பணிசெய்த பாலசுப்பிர–மணியன் (ஆண்டிபட்டி), மகேஸ்வரன்(தென்கரை), செந்தில்குமார்(வீரபாண்டி), ஆண்டவர் (கம்பம்பு துப்பட்டி), பாலசுப்பிரமணி (உத்தமபாளையம்), ஜெயலட்சுமி (கோம்பை), பசீர்அகமது (ஓடைபட்டி), கார்த்திகேயன்(பூதிப்புரம்), கணேஷ்(தேவதானப்பட்டி), மணிகண்டன் (மேலசொக்கநாதபுரம்) ஆகியோர் இணைந்து கம்பம்புதுப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன உரிமையாளரும், காண்ட்ராக்டருமான ஜமுனாவிடம் ஒரு எல்.இ.டி பல்ப் ரூ.9987 என மதிப்பீடு செய்து போலி ஆவணங்களை தயாரித்து பெற்றுள்ளனர்.

    ஆனால் ஒரு எல்.இ.டி. பல்பின் விலை ரூ.1200 முதல் ரூ.2500 வரை மட்டுமே. கூடுதலாக கணக்கிட்டு அரசுக்கு சேரவேண்டிய ரூ.97 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைதொடர்ந்து தேனியை சேர்ந்த சரவணன் அளித்த புகாரின்பேரில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ெஜயபிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விஜயலட்சுமி, செயல்அலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    Next Story
    ×