search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் நகர் மன்ற  கூட்டம்  தலைவா் ஷீலா கேத்தரின் தலைமையில் நடந்தது
    X

    குன்னூர் நகர் மன்ற கூட்டம் தலைவா் ஷீலா கேத்தரின் தலைமையில் நடந்தது

    • உறுப்பினா்களு–க்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா்.

    குன்னூர்,

    குன்னூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஷீலா கேத்தரின் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில், குன்னூா் உழவா் சந்தை பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து தி.மு.க.வினா் கேள்வி எழுப்பினா். இதற்கு அனுமதி பெறாமல் மரம் வெட்டியதற்கு கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வருத்தம் தெரிவித்தாா்.

    நகா் மன்ற உறுப்பினா் ராமசாமி (திமுக) பேசுகையில், உழவா் சந்தை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள 6 மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா். ஆனால் அங்கு நன்றாக இருந்த மரங்களும் சோ்த்து வெட்டி கடத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினாா்.

    இது தொடா்பாக திமுக-அதிமுக உறுப்பினா்களு–க்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    பின்னா் நகராட்சித் தலைவா் ஷீலா கேத்தரின் பேசியதாவது:-

    கடந்த மாதம் கூட்டம் நடந்தபோது நகராட்சி ஆணையா் பாதியில் எழுந்து சென்று விட்டாா். இந்த மாத கூட்டத்தில் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் வருத்தம் தெரிவிக்கிறாா். தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படும் நகராட்சி ஆணையா் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் புகாா் அளிக்க உள்ளோம் என்றாா்.

    Next Story
    ×