என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரமத்தி அகதி முகாமில் தகராறு; 2 பேர் கைது
  X

  பரமத்தி அகதி முகாமில் தகராறு; 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • புகாரின் பேரில் பரமத்தி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.இவரது மகன் விஜயகாந்த் (27). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த அஜந்தன் (24) கூலித்தொழிலாளி.இவர்கள் இருவரும் கடந்த 27-ந் தேதி மது அருந்தி விட்டு விஜயகாந்த் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

  அப்போது விஜய காந்திடம் இருந்த அஜந்தனின் மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டுள்ளார். சாவியை விஜயகாந்த் தரமறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த அஜந்தன் விஜயகாந்த் மற்றும் அவரது தாய் ஜானகியை பார்த்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் விஜயகாந்த் அதே பகுதியில் உள்ள அஜந்தனின் சித்தப்பா மகள் சரேந்தினியிடம் (25) மது அருந்தி விட்டு சென்று தகராறு செய்துள்ளார். . தகவல் அறிந்து அங்கு வந்த அஜந்தனுக்கும் விஜயகாந்துக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதில் விஜயகாந்த் அஜந்தனையும் அவரது சகோதரி சுரேந்தினியையும் தாக்கி தீ வைத்து கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் பரமத்தி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பரமத்தி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து அஜந்தன் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×