என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    சீர்காழியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சீர்காழியில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

    • கல்வி ஊக்க தொகையை மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • 3 மாதங்களுக்கு ஒரு முறை குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை குழந்தைகள், பாதுகாப்பு மையம் சார்பில் நகராட்சி பகுதியில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

    நகர சபை தலைவர் துர்கா ராஜ சேகரன் முன்னிலை வகித்தார்.

    மேலாளர் கார்கான் வரவேற்றார்.

    கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் பெற்றோர்களை இழந்து வாழும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை மாதம் ரூ.4000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவைக்கப்படும்.

    இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    நகராட்சி பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு 1 முறை அலுவலர் கொண்டு நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்துக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    முடிவில் ராஜகணேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×