என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்
- கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் அ.தி.மு.க சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞர்கள் இளம்பெண் பாசறை மகளிர் குழு அமைப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்சுணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கம்பட்டி குமார், தப்பகம்பை கிருஷ்ணன், ஸ்டீபன் என்ற வேலு, பேரூராட்சி செயலாளர் நஞ்சு என்ற சுப்பிரமணி ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
உடன் கலைபிரிவு மாவட்ட செயலாளர் உயிலட்டி கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் ஒன்றிய, பேரூராட்ச்சி நிர்வாகிகள் மகளிரணி, சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






