search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - மேயர் ஆய்வு
    X

    சாலை பணிகளை மேயர் ஆய்வுசெய்த காட்சி.

    தூத்துக்குடியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - மேயர் ஆய்வு

    • கதிரேசன் கோவில் தெருவில் உள்ள 2-ம் கேட் வரதவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடைபெற்ற அனைதானத்தை மேயர் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி வி.எம்.எஸ்.நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை பணி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த பகுதியில் சீரான குடிநீர் கிடைக்க செய்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக கூறினார்கள்.

    இதனைத்தொடர்ந்து சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கதிரேசன் கோவில் தெருவில்

    உள்ள 2-ம் கேட் வரதவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடைபெற்ற அனைதானத்தை மேயர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளின் போது மாநகர கவுன்சிலர்கள் கீதாமுருகேசன்,ரெங்கசாமி, சுப்புலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், மீனாட்சிசுந்தரம், வட்டச்செயலாளர் பொன்ராஜ், போல்பேட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்னுசாமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×