search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூரில்  அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

    கீழப்பாவூரில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • காங்கிரஸ் சார்பாக அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பழி வாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தி வருவதாகவும், அதனை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழப்பாவூர் சென்ட்ரல் பாங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமையில், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டார பொருளாளர் மாரிமுத்து, பாவூர்சத்திரம் நகர தலைவர் ஆனந்த், ராமராஜா, சிவசுப்ரமணியமுதலியார், சின்னராஜா, நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் பொன்கணேசன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மதியழகன், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஞானச்செல்வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    நிகழ்ச்சியில் பாக்கியராஜ்,ஆசீர்வாதம், சுப்பையா, பரமசிவன், தொண்டன் ராஜேந்திரன், சௌந்தரபாண்டியன், பரமசிவன், ராமசாமி நாடார், கணேசன், காளி தேவர், மாரியப்பன், பழநி, பெரியசாமி, செல்வன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், முடிவில் வட்டார செயலாளர் குமார் பாண்டியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×