search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமுதாய வளைகாப்பு விழா
    X

    கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    சமுதாய வளைகாப்பு விழா

    • பெண்களுக்கு மாலை அணிவித்து கலெக்டர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
    • விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவு பண்டங்களை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

    தரங்கம்பாடி:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் மயிலாடுதுறையில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா, பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தனது பெண் குழந்தையுடன் பங்கேற்று 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா மயிலாடுதுறை பல்வராயன்பேட்டையில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தனது பெண் குழந்தையுடன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏககள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், மயிலாடுதுறை வட்டாரத்தில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கும், சீர்காழியில் இருந்து 25, குத்தாலம் 50, செம்பனார்கோவில் 50 மற்றும் கொள்ளிடம் வட்டாரத்திலிருந்து 25 என மொத்தம் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பெண்களுக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து விழாவில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவுப் பண்டங்களை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட திட்ட அலுவலர் தமிமுன்நிஷா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா, ஒன்றிய குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை காமாட்சிமூர்த்தி, குத்தாலம் மகேந்திரன், மற்றும் ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×