என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
- 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
கும்பகோணம்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
இதில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர தி.மு.க. செயலா ளருமான சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ரேவதி, புனிதவள்ளி, கவுன்சிலர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






