என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி திடீர் மாயம்
    X

    கல்லூரி மாணவி திடீர் மாயம்

    • மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
    • இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை, குள்ளப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×