search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தேனியை உருவாக்க வேண்டும் கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
    X

    கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பங்கேற்று பேசினார்.

    போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தேனியை உருவாக்க வேண்டும் கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்

    • தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.
    • பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பங்கேற்றார்.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தனி நபர் சுகாதாரம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டினை தடைசெய்தல், மத்திய, மாநில மற்றும் நிதிக்குழு மானிய திட்ட ங்களின் கீழ் செயல்படுத்த ப்பட்டு வரும் பணிகள்,

    ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நீர்நிலை களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010- மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நட வடிக்கைகள், திட்டப்பணி கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதித்து தீர்மானங்களை நிறை வேற்றி, அனைத்து நிலை களிலும் கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெறும் வகையில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசால் மட்டுமே போதைப் பொருள்களை முழுமையாக தடுத்திட இயலாது பொதுமக்களின் விழிப்புணர்வு இருந்தால் தான் போதைப் பொரு ள்களை பயன்படுத்துவதை தடுத்திட முடியும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துகடைகள், வாணிபக்கடைகளை முழுமையாக கண்காணித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, தேனி மாவட்டத்தினை போதைப் பொருள் இல்லாத மாவட்ட மாக உருவாக்கிட வேண்டும்.

    கிராமங்களில் தடை செய்யபட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், டம்ளர் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை தவிர்த்து துணிப்பை, வாழை இலை மற்றும் பாக்கு மட்டை தட்டுகள் பயன்படுத்திட வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தங்கள் பகுதிக்கே வரும் தூய்மை காவலர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பை களாக வழங்கிட வேண்டும் என்றார்.

    Next Story
    ×