search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளம் சூழ்ந்த பழையாறு சுனாமி நகர் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
    X

    பக்கிங்காம் கால்வாயை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

    வெள்ளம் சூழ்ந்த பழையாறு சுனாமி நகர் பகுதிகளை கலெக்டர் ஆய்வு

    • தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும்
    • குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதை தடுக்க பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை கட்ட வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி உபரி வெள்ள நீர் சீற்றம் காரணமாக கடலில் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் பக்கிங்காம் கால்வாய் வழியே வந்து பழையாறு சுனாமி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து வருகிறது.

    பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. கடல் உள்வாங்காத காரணத்தால் வெள்ள நீர்மட்டம் மேலும் உயர்ந்து பக்கிங்காம் கால்வாயில் புகும்போது, பக்கிம்காம் கால்வாய் கரை மூழ்கி பழையாறு சுனாமி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

    எனவே சுனாமி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இன்னிலையில் வெள்ளம் சூழ்ந்த பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சுற்றி தண்ணீர் சூழ்ந்த பகுதியையும், மக்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, விஏஓ பவளச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×