search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் உலக தாய்ப்பால் வார விழாவில் கலெக்டர் பங்கேற்பு
    X

    கடலூர் நடந்த தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜை படத்தில் காணலாம்.

    கடலூரில் உலக தாய்ப்பால் வார விழாவில் கலெக்டர் பங்கேற்பு

    • பெட்டகம், குழந்தை வளர்ப்பு கையேடு வழங்கினார்
    • அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்ட முன்னெடுப்பாகவும் மற்றும் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் தாய்ப்பால் வார விழாவில் பிறந்த பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து கையேட்டினையும் வழங்கினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 'பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 1.8.2023 முதல் 7.8.2023 வரை தாய்ப்பால் வார விழாவில் பிறந்த 25 பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் தாய்மார்களை பாராட்டி குழந்தை நலப் பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் பச்சிளம் சிசு வளர்ப்பு குறித்து கையேடுகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் காலத்திற்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தவறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது. இதனை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) டாக்டர் சாரா செலின்பால, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி , அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×