search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 317 பேருக்கு பணி நியமன ஆணை - கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்
    X

    முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    பெரியகுளம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 317 பேருக்கு பணி நியமன ஆணை - கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2858 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். அதில் 317 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.

    இதில் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×