search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேகமலையில் ரேசன் கடை, தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
    X

    மேகமலையில் ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து அப்பகுதி மக்களிடம் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கேட்டறிந்தார்.

    மேகமலையில் ரேசன் கடை, தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

    • மேகமலை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி மற்றும் ரேசன் கடையின் செய ல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டு மானப்பணிகளையும் பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் மேகமலை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி மற்றும் ரேசன் கடையின் செய ல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேகமலை பேரூராட்சி ப்பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ தொடக்கப்ப ள்ளி, மணலாறு ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், இப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் இருப்பு,

    சமைப்பதற்கு தேவையான பாத்திரங்களின் எண்ணிக்கை, மையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவ, மாணவி யர்களுக்கான உணவின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ-மாணவிகளிடம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, மேகமலை கூட்டுறவு பண்டகசாலை ரேசன் கடை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், அளவு, ரேசன் கடை உரிய நேரத்திற்கு திறக்கப்படு கிறதா? என கேட்டறிந்தார். மேலும், மேகமலை பேரூராட்சிப்பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டு மானப்பணிகளையும் பார்வையிட்டார்.

    Next Story
    ×