search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் நிலச்சரிவு வாய்ப்புள்ள பகுதிகளில் கலெக்டர் முரளிதரன்  ஆய்வு
    X

    போடி அருகில் உள்ள முந்தல் முதல் குரங்கனி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் நிலச்சரிவு வாய்ப்புள்ள பகுதிகளில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு

    • தேனி மாவட்டத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 14-ந்தேதி மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 14-ந்தேதி மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவிக்கையில்,

    மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து துணை ஆட்சியர் தலைைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டல குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க சமுதாய கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அங்கு சுத்தம் செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் அதனை வெளியேற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். உயிரிழப்பு, வீடுகள் சேதம், பயிர்சேதம் ஆகிய விபரங்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் புகார்களை எந்தநேரமும் தெரிவிக்கும் வகையில் அலுவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.

    கனமழை சமயங்களில் அடிக்கடி மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை தெரிவிக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகளில் ஜெனரேட்டர், மருத்துவ உபகரணங்கள், தேவையான மருந்து இருப்பு ஆகியவற்றை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×