search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைபாடு இல்லாத பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    சருத்துப்பட்டி ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பின் தரம் மற்றும் உயரம் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    குறைபாடு இல்லாத பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி, கோடாங்கிபட்டி ஊராட்சி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி, சருத்துப்பட்டி ஊராட்சி, தென்கரை பேரூராட்சி மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    அரிசி குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கை, இதுவரை பொங்கல் பரிசு த்தொகுப்பு வழங்கப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் பச்சரிசியின் தரம், இருப்பு மற்றும் கரும்பின் அளவு அதன் தடிமன் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் பொங்கல் பரிசுத்தொகு ப்பின் சர்க்கரை, பச்சரிசி, கரும்பு ஆகியவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் மற்றும் முழு கரும்பு ஒன்று அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிடாமல் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவித்து, அதனை மாற்று வதற்கான உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    Next Story
    ×