search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு
    X

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு

    • மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
    • பழமையான கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முடிவடைந்த பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் நடந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பின்னர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள பழமையான ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் நிதி பெற்று பேரூராட்சிக்கு வருமானம் வரத்தக்க வகையில் நிரந்தர கடைகள் கட்டி வாடகைக்கு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்து பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×