என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் 243 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்
- 16 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மின்னணு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டது.
- ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் 110 கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
ஊட்டி,
கூடலூா் தாசில்தார் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
இதில் 16 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மின்னணு ரேஷன்கார்டுகள், வருவாய்த் துறை சாா்பில் ரூ.4.95 லட்சம் மதிப்பில் 24 பேருக்கு முதியோா் உதவித் தொகை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பந்தலூா் பகுதியைச் சோ்ந்த சுய உதவிக் குழுவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் மிளகு தரம் பிரிக்கும் எந்திரம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உள்பட 243 பயனாளிகளுக்கு ரூ.10.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொடுத்த 110 கோரிக்கை மனுக்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினாா்.
அதன்பிறகு தேவா் சோலை உள்வட்டத்துக் குட்பட்ட செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு சென்ற கலெக்டர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வனப்பாதுகாவலா் கருப்பையா, கூடலூா் நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்ற தலைவா் பரிமளா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கீா்த்தனா, கூடலூா் தாசில்தார் சித்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாதுரை, ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.






