search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா காலத்தில் பணி புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு நினைவு பரிசு-கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    X

    கொரோனா காலத்தில் பணி புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு நினைவு பரிசு-கலெக்டர் அம்ரித் வழங்கினார்

    • யுஎன்சிஎஸ் 2013 முதல் கோத்தகிரியிலும், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் 2018 முதல் கூடலூரில் செயல்படத் தொடங்கியது.
    • குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ஜெம்பார்க் கூட்டரங்கில், (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் பணி புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கலெக்டர் அம்ரித் நினைவு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    (யுஎன்சிஎஸ்) 2013 முதல் கோத்தகிரியிலும், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் 2018 முதல் கூடலூரில் செயல்படத் தொடங்கியது. யுஎன்சிஎஸ் மற்றும் எஸ்எஸ்டி பெண்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம், கால்நடைகள் மற்றும் சுகாதாரம், கிராமங்களின் நிலையான முழுமையான வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்படுகின்றன.

    மேலும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கொரோனா தொற்றுநோய் மக்களுக்கு பெரும் சவால்களையும் இருந்தது. அச்சமயத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர்கள் பொது மக்களுக்காக அதிக அளவில் பணியாற்றி உள்ளனர். அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு, பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்பட்டுள்ளது.

    இது தவிர, 600-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளன. மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசால் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களின் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) மூலம் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து முன்னேற்ற பாதையில் என்ற புத்தகத்தினை வெளியிட்டு, பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தலைவர் ஸ்வரன் சிங் யு.என்.சி.எஸ் முன்னாள் தலைவர் மற்றும் டாக்டர். ஸ்ரீதரன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி, சீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநர் சுந்தர்ராஜன், ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்க கள இயக்குநர் சிங்கராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×