என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பரிசு கேடயம், சான்றிதழ்கள்- கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
    X

    வாக்குசாவடி நிலை அலுவலர் ஒருவருக்கு பரிசு கேடயம், சான்றிதழ்களை கலெக்டர் ஆகாஷ் வழங்கிய காட்சி


    வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பரிசு கேடயம், சான்றிதழ்கள்- கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டது.
    • 100 சதவீதம் முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர்களது பணியை பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியைப் பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப் படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்களை ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுவது அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1504 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை தத்தமது பாகங்களில் 100 சதவீதம் முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர்களது பணியை பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    Next Story
    ×