என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.
எரியோடு அருகே இடிந்து விழும் நிலையில் சுகாதார நிலைய கட்டிடம்
- ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகுநாயக்கனூரில் 40 வருடங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
- இந்த கட்டிடத்தின் அருகே தற்போது துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகுநாயக்கனூரில் 40 வருடங்களுக்கு முன்பு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளது.
அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் அருகே தற்போது துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
எனவே பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






