search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள்
    X

    சங்கனாப்பேரி கிராமத்தில் தென்னங்கன்றுகள் வழங்கிய போது எடுத்த படம்.


    வாசுதேவநல்லூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள்

    • வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் தலைமை தாங்கி சங்கனாப்பேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

    வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சாகுல் ஹமீது, ஆனந்த், சங்கனாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சமுத்திரவேல், விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் உணவு மற்றும் நுண்ணூட்ட சத்து விநியோகம் திட்டத்தின் கீழ் சுழற் கலப்பைகளை சங்கனாப்பேரி, திருமலாபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார். திருமலாபுரம் விதைப் பண்ணைகளையும், தென்மலை மற்றும் ராமசாமி யாபுரம் பகுதி களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தரிசு நில தொகுப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×