search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
    X

    பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தபோது எடுத்த படம்.

    தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

    வட்டார கல்வி அலுவலகத்தின் சார்பாக தலைமை சிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணி நிறைவு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் சார்பில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    பணி நிறைவு பெறும் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். முக்கியமாக கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று பாடம் நடத்தியது, மரக்கன்றுகள் வழங்கியது, மாணவர்களுக்கு உண்டியல் பரிசுத்தொகை வழங்கியது போன்றவற்றால் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.

    பள்ளி இறுதி நாளில் பள்ளியில் உள்ள அனைத்து இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இவரது சேவையை பாராட்டி என்.டி.செல்வத்திற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் கலெக்டர் ரோகிணியிடம் 2 விருதுகளையும், பல்வேறு அமைப்புகள் மூலம் நிறைய விருதுகள் பெற்றவர்.

    இவருக்கும், வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பச்சமுத்து, ஆனையாம்பட்டி புதூர் தலைமை ஆசிரியர் நாஸ்லின்பேகம் ஆகியோருக்கு வட்டாரக்கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ், வட்டாரக் அலுவலர் மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டிப் பேசினார்கள்.

    பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்களான செல்வம், பச்சமுத்து, நாஸ்லின்பேகம் ஏற்புரை நிகழ்த்தினர். கெங்கவல்லி வட்டாரத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்களால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முதல் விழா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    Next Story
    ×