என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தையன்கோட்டை பேரூராட்சி அனைத்து வார்டு பகுதியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
சித்தையன்கோட்டையில் தூய்மை பணி முகாம்
- நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
- சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.
செம்பட்டி:
சித்தையன்கோட்டை பேரூராட்சி அனைத்து வார்டு பகுதியில், ஒட்டு மொத்த தூய்மை பணி முகாம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மேலும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், அப்துல் கரீம், இளநிலை உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.






