search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்-கோவை மாவட்டத்தில் 92.38சதவீதம் பேர் தேர்ச்சி
    X

    10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்-கோவை மாவட்டத்தில் 92.38சதவீதம் பேர் தேர்ச்சி

    • கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.குளம் பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது.
    • கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

    கோவை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.குளம் பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது.

    இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வினை 524 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்களும், 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.

    இன்று தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 39 ஆயிரத்து 636 பேரில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69, மாணவிகள் தேர்ச்சி வீதம் 96.08 என மொத்தமாக மாவட்டத்தில் 92.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    Next Story
    ×