search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் குடிமனை பட்டா கேட்டு திரண்ட பொதுமக்கள்
    X

    கோட்டாட்சியர் ரஞ்சித்திடம் மனு அளித்த பொதுமக்கள்.

    தஞ்சையில் குடிமனை பட்டா கேட்டு திரண்ட பொதுமக்கள்

    • சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய்த்துறை, தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இதற்காக இன்று காலை முதலே 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் , சிலோன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலருக்கு குடிமனை கிடையாது. இதனால் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் உள்ள வாரியை ஒட்டிய ஒரு காலியிடத்தில் திரண்டு அங்கு குடியேறுவதற்காக கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய்த்துறை, தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும்.

    இதனால் நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதை ஏற்றுக்கொண்டு அன்றைய தினம் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மறியல், சிலோன் காலனி உள்ளிட்ட பகுதி பொதுமக்களுடன், கோட்டாட்சியர் ரஞ்சித் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    இதற்காக இன்று காலை முதலே

    700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். அவர்களில் சிலரை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பொதுமக்களுடன் விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    நாங்கள் பல ஆண்டுகளாக குடிமனைக் பட்டா கேட்டு போராடி வருகிறோம். எங்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    உங்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.

    இதையடுத்து அலுவலகத்தின் வழியே திரண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் கோட்டாட்சியர் ரஞ்சித்திடம் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் பலருக்கு குடிமனை பட்டா இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடியும் நடவடிக்கை இல்லை. உடனடியாக அனைவருக்கும் குடிமகனை பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அனைவரும் மனு அளித்த பின்னர் கலைந்து சென்றனர். இதனை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×